வவுனியாவிலிருந்து சென்ற தனியார் பஸ் மோதி ஒருவர் பலி!!
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பௌத்த மத்திய நிலையத்திற்கு அருகில் இன்று (9) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது உந்துருளியில் பயணித்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பேருந்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

