புதினங்களின் சங்கமம்

26 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் சந்திரிகா கைது!!

போதைப்பொருள் கடத்தல்காரரான சந்திரிகா என்பவர், 2.6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்துடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினால் கிரிபத்கொடையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
52 வயதான இந்தப் பெண், களனி பகுதியில் வசித்து வந்துள்ளார்.
கிரிபத்கொட, ராகம மற்றும் களனி பகுதிகளில் இவர் நீண்ட காலமாக ஹெரோய்ன் விநியோகித்து வந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.