கோப்பாய் வைத்திய சாலையில் சிகிச்சைக்கு சென்ற சிறுமியை கட்டிப்பிடித்து உறவு கொள்ள முனைந்த ஆண் தாதி..
கோபாய் பிரதேச வைத்திய லையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி முகம் கழுவுவதற்காக சென்ற நிலையில் அதை வைத்திய சாலையில் பணியாற்றும் 48 வயது மதிக்கத்தக்க ஆண் தாதி கட்டிப்பிடித்து உறவு கொள்ள முனைந்தமை வைத்தியசாலையில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது புத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி சிகிச்சைக்காக கோப்பாய் பிரதேச வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிறுமி நேற்று மாலை முகம் கழுவுவதற்காக வைத்திய சாலையில் குளியலறைப் பகுதிக்கு சென்றுள்ளார்.
அந்த சமயம் குறித்த விடுதியில் தங்கி இருந்த புத்தூர் பகுதியைச் சேர்ந்த தாதி பின்னால் சென்று சிறுமியை கட்டிப்பிடித்து அங்க சேட்டையில் ஈடுபட்டார் .
குறித்த விடயம் தொடர்பில் யாருக்கும் சொல்லக்கூடாது என அச்சுறுத்திய நிலையில் வைத்தியசாலைக்கு வந்த தாயிடம் சிறுமி நடந்தவற்றை தெரிவித்த நிலையில் வைத்திய சிறுமியின் உறவினர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வைத்தியசாலைக்கு வந்த நிலையில் சாலையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணும் துஸ்பிரயோகத்தை மேற்க்கொண்டவரும் புத்தூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

