யாழ்.பல்கலை வவுனியா வளாகத்தில் கஞ்சாசெடி வளர்ப்பு?
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் விடுதியில் கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் அது கஞ்சாவா அல்லது ஒருவகை தாவரமா என ஆராய்ந்து வருவதாக வளாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா வளாகத்தின் விடுதியில் கஞ்சா செடிகளை ஒத்த செடி வகை கைப்பற்றப்பட்ட நிலையில் அச் செடிகள் வளாகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இச் செடிகள் அங்கு வளர்க்கப்பட்டு மாணவர்களால் பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் நிலவி வரும் நிலையில் குறித்த செடி தொடர்பில் வவுனியா வளாகத்தினரால் ஆராயப்பட்டு வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா வளாகத்தினருடன் தொடர்புகொண்டு கேட்டபோது கஞ்சா செடியை போன்ற செடி வகை கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. அது கஞ்சாவா அல்லது வேறு தாவர வகையை சேர்ந்ததா என ஆராயப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.

