Home புதினங்களின் சங்கமம் நம்மட தமிழ் இளைஞர்களுக்கு பேஸ்புக்கில் ஒருவர் அறிவுரை சொல்லுறார்… வாசியுங்கள்

நம்மட தமிழ் இளைஞர்களுக்கு பேஸ்புக்கில் ஒருவர் அறிவுரை சொல்லுறார்… வாசியுங்கள்

வடக்கு வாழ் இளைஞர்களுக்கு ஒன்றை தெளிவாக சொல்கிறேன் அவன் சொல்றான் இவன் சொல்றான் என்று தேவையற்ற வேலைகளில் ஈடுபடாதிர்கள் அமைதியாக இருங்ககள் அங்கே கொழுத்துங்கள் இங்கே அடியுங்கள் உடையுங்கள் என்பவற்றை தவிருங்கள்.*

*தெற்கின் நிலவரம் வேறு தமிழர் தாயக நிலவரம் வேறு தெற்கில் இராணுவத்தின் துப்பாக்கிகள் தோட்டாக்களை வெளியே தெறிக்க விட வேண்டும் என்றால் ஒரு இராணுவம் ஒன்றுக்கு பத்து தரம் யோசிக்கும் ஆனால் வடக்கு கிழக்கில் அப்படி இல்லை ஒரு செக்கன் போதும்.அவர்கள் தென்னிலங்கையில் போராட்டம் செய்யும் பெரும்பாண்மை சிங்கள இளைஞர்களை பார்ப்பதற்கும் உங்களை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு என்றுமே நீங்கள் அவர்களுக்கு தமிழர்கள் தான் என்றுமே உங்களை அவர்கள் பிரிவினைவாதிகளாகவும் கொட்டியாவாகவும் வேற்று இனத்தவராகவும் தான் பார்க்க கூடும் உங்கள் நடவடிக்கைகள் எல்லை மீறினால் விளைவுகள் விபரீதமாகும்.
ஆகவே அவதானம் மட்டுமில்லை புத்தியில் நிதானம் தேவை ஏற்கெனவே கற்றுக் கொண்ட கடந்து வந்த இனமாக சிந்தியுங்கள் மீண்டும் சொல்கிறேன் திசை திருப்பப்படும் பல சமபவங்கள்.*

*இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன் சொந்த இனத்தை சேர்ந்தவர்கள் மீதே இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆட்சியாளர்களின் துப்பாக்கிகள் குறி பார்த்தன நீங்கள் அவர்களின் அன்புக்குரியவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உணர்ச்சிவசப் படாதிர்கள் கடந்த காலங்கள் உங்களுக்கு பல படிப்பினைகளை தந்திருக்கும் அமைதியாக சுயபுத்தியுடன் தந்திரோபாயமாக கடந்து செல்லுங்கள்‘*

ஆசிரியர் இமையான்