புதினங்களின் சங்கமம்

மாமியார் வீட்டுக்கு அனுப்பப்பட்ட மஹிந்தானந்த!

முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது சீன நிறுவனம் ஒன்றிடம் தரமற்ற உரத்தை நாட்டுக்கு இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் அவரைக் கைது செய்வதற்காக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், இன்றைய (19) தினம் அவர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகிய  நிலையில், அவரை மே 26 வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, வழக்கு விசாரணைகளை இன்று (19) முன்னெடுக்குமாறு சட்டத்தரணிகள் ஊடாக அவர் சீராக்கல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.