புதினங்களின் சங்கமம்

கோழித்தீன் வாங்க கடைக்குச் சென்ற சிறுமியுடன் கதை கொடுத்து உறவு கொண்ட பஸ் நடத்துனர் கைதானது எப்படி?

கோழித்தீன் வாங்க கடைக்கு வந்த சிறுமியோடு கதைத்து நட்பை ஏற்படுத்தி அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பஸ் நடத்துனர் ஒருவர் கைது – பசறையில் சம்பவம்
கடந்த 21 ம் திகதி மதியம் காணமல் போன சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் பசறை டெமேரியா ராக்கமலை பிரிவில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகி இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
நமுனுகுலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லயன் இலக்கம் 13, மவுஸ்ஸாகலை பிரிவு கனவரல்ல தோட்டம், நமுனுகுலையை சேர்ந்த, பசறை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயது 4 மாதங்களும் உடைய சிறுமியே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 21 ம் திகதி பாடசாலைக்கு செல்லாமல் கோழிகளுக்கான உணவை கொள்வனவு செய்வதற்காக மதியம் 1.00 மணியளவில் பசறை நகருக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என பசறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 21 ம் திகதி இரவு 10.05 மணியளவில் குறித்த சிறுமியின் தந்தையினால் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டிற்கு அமைய உடன் விசாரணைகளை மேற்கொண்ட பசறை பொலிஸார் பசறை டெமேரியா மீரியபெத்த ராக்கமலை பகுதியில் லயன் குடியிருப்பு வீடொன்றில் இருந்து சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பின்னர் சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தான் பசறை நகருக்கு வந்த போது பேருந்து ஒன்றின் நடத்துநருடன் சிநேகிதம் ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் குறித்த நபரின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த நபரின் வீட்டுக்கு குறித்த நபருடன் சென்றதாகவும் , நபரின் வீட்டில் யாரும் இருக்கவில்லை என்வும், இதன்போது குறித்த நபர் தன்னுடன் பலமுறை உடலுறவில் ஈடுபட்டதாகவும் பொலிஸாரிடம் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் வாட்டு இலக்கம் 7 ல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது தலைமறைவாகி இருந்த சந்தேக நபர் பதுளை பேருந்து தரிப்பிடத்தில் இருப்பதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எம்.பியரட்ணவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் குழுவினர் உடன் பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு விரைந்து , பதுளை பேருந்து தரிப்பிடத்தில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய பசறை டெமேரியா ராக்கமலை தோட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
சந்தேக நபரை நேற்றைய தினம் (24/05) பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது (05/06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.