அம்பாறையில் நிறை வெறியில் மிதந்த மட்டக்களப்பு பொலிஸ் அதிகாரி தொடர்பில் மேலும் தகவல்கள் (வீடியோ)
அம்பாறையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காவன்திஸ்ஸ கல்லூரிக்கு அருகில் மே 16 ஆம் திகதி பகல் நேரத்தில் அம்பாறை பிரதேச போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மே 23 ஆம் திகதி அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவர் மட்டக்களப்பு ஆயித்தமலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது தெரிய வந்துள்ளது.
வாகனம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மே 17 ஆம் திகதி முதல் அந்த அதிகாரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

