புலம்பெயர் தமிழர்

54 வயதான இலங்கை தமிழ்ப் பெண் கணவனை லண்டனில் குத்தி கொலை செய்தது ஏன்?

பிரித்தானியாவில் 57 வயதான இலங்கைத் தமிழரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இரவு 11.50 மணியளவில், இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் Burdock Close, Wymondham, Norfolk பகுதியில் வாழ்ந்த, கடை உரிமையாளரான ராஜசிங்கம் குமாரதாஸ் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், தலை மற்றும் நெஞ்சு பகுதியில் கடும் காயங்களுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் குறித்த நபரை மீட்டுள்ளனர்.காயமடைந்த வரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 54 வயதான அவரது மனைவி, ஜெயமலர் குமாரதாஸ் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை தாம் ஆரம்பித்துள்ளதாக புலனாய்வு ஆய்வாளர் Kate Thacker தெரிவித்துள்ளார்.

2008ஆம் ஆண்டு குமரதாஸ் மற்றும் அவரது மனைவி 195,000 பவுண்ட் செலவில் கொள்வனவு செய்த 3 படுக்கையறை கொண்ட வீட்டை பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.

இலங்கையரான குமாரதாஸ் சொந்தமான சுப்பர் மார்க்கெட் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.சம்பவத்திற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.