புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் 16 சிறுவர்களை கொடூரமாகச் சிதைத்த காமுகன் இவன்!! சிறீதரன் காப்பாற்ற கடும் முயற்சி!! வீடியோ

சமூகவலைத்தளப் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…… இதற்கு முன் நாம் வெளியிட்ட செய்தி இணைப்பும் கீழே தந்துள்ளோம் 

கிளிநொச்சியில் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை ஒன்றின் சிற்றூழியராக பணியாற்றும் விளையாட்டு துறை அமைப்பாளராகவும் ஸ்ரீதரனின் இணைப்பாளராகவும் அலன் செயற்பட்டு வருகின்றார். இவரிடம் குறித்த விளையாட்டு பயிற்சிக்காக சென்று சிறுவர்களில் 16 பேரை அவர் பாலியல் ரீதியாக துஸ்பிரயோத்திற்குள்ளாக்கியுள்ளார். குறித்த சிறுவர்கள் 10 தொடக்கம் 13 வயதுக்குட்டவர்கள் இவர்களை பயிற்றுவிப்பாளர் மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளார்.

குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களில் சிலரின் நடத்தைகளில் மாற்றம் மற்றும் கல்வியில் திடீர் பின்னடைவு என்பவற்றின் அடிப்படையில் கவனம்செலுத்திய போது ஆரம்பத்தில் இரண்டு சிறுவர்கள் மூலமே விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட போது குறித்த பயிற்றுவிப்பாளரால் 16 சிறுவர்கள் இவ்வாறு
துஸ்பிரயோகத்திற்குள்ளான அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதனையடுத்த பாடசாலை நிர்வாகம் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு அதனடிப்படையில் பொலீஸாரின் கவனத்திற்கு விடயம் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இன்றைய தினம் (11) கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு பெற்றோர் மற்றும் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வாக்குமூலத்தின் அடிப்படையில் தொடர் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டிருந்த வேளை கிளிநொச்சி மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்ட ஸ்ரீதரன் இது தேர்தல் காலம் என்பதினால் தனது இணைப்பாளருக்கு எதிராக எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனவும் தான் பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் பேசுவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் இதே வேளை சந்தேக நபரை இதுவரை கைது செய்யாத பொலீஸார் பாதிக்கப்பட்ட சிறுவர்களை குற்றவாளிகள் போல் நடத்துவதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த புதன் கிழமை பாடசாலைக்கு சென்ற பொலீஸார் சிறுவர்களை மாலை 4 மணிவரை அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளதோடு அவர்களை பொலீஸ் வாகனத்தில் பொலீஸ் நிலையம் ஏற்றிச்செல்ல முற்பட்டுள்ளனர். இதனால் சிறுவர்கள் பயத்தில் அழுதுள்ளனர்.மாலை நான்கு மணி வரை மதியம் உணவு கூட இன்றி சிறுவர்களை பொலீஸார் பாடசாலையின் அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர்கள் பொலீஸாருடன் முரண்பட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகள் குற்றவாளிகள் அல்ல அவர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் எனவே அவர்களின் உளவியலை புரிந்துகொண்டு பொலீஸார் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியோடு விசாரணைகளுக்காக பிள்ளைகளை தாம் பொலீஸ் அழைத்து வருவதாகவும் பொலீஸ் வாகனத்தில் ஏற்றிச்செல்ல அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கவே அங்கிருந்து பொலீஸார் விலகிச் சென்றுள்ளர்.

இந்தச் சம்பவம் பெற்றோர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தோடு சிறுவர்களின் உளவியலை பாதிக்கும் வகையில் பெற்றோரை இந்த பிரச்சினையில் தாமாக விலகிக்கொள்ளும் வகையிலும் பொலீஸாரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது என்றும் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

May be an image of 2 people and text that says "சிறிதரனின் பாதுகாப்பில்"May be an image of 5 people, people smiling and text that says "சிறிதரனின் பாதுகாப்பில்"

சிறிதரனின் அடிவருடியான பயிற்றுவிப்பாளர் பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம்!! வீடியோ