சிறிதரனின் அடிவருடியான பயிற்றுவிப்பாளர் பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம்!! வீடியோ
பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் பிரத்தியோக செயற்பாட்டாளர் ஒருவர் பிரபல பாடசாலை ஒன்றில் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த நிலையில் குறித்த பாடசாலையின் மாணவர்களிடம் தவறான முறையில் நடந்து சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுடைய பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்தினரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
பாடசாலை நிர்வாகம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறுவர் நன்னடத்தை பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அத்துடன் பொலிஸ் நிலையத்துக்கும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வலியுறுத்தி இருந்தது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தனது பிரத்யோக செயற்பாட்டாளரை காப்பாற்றும் நோக்குடனும் தேர்தல் காலம் என்ற வகையிலும் பொலிஸ் உயர் அதிகாரியுடன் பேசி குறித்த விடயத்தை சமாளிக்குமாரும் குறித்த மாணவருடைய பெற்றோர்களையும் பாடசாலை நிர்வாகத்தையும் அச்சுறுத்துமாரும் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக
குறித்த பாடசாலையில் போலீசார் அடாவடியாக செயல்பட்டதாக பாடசாலை நிர்வாகம் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் விசனம் தெரிவித்துள்ளனர்..
