புதினங்களின் சங்கமம்

சுன்னாகம் பிரதேச சபையின் சுன்னாகம் நகர வட்டார முதன்மை வேட்பாளராக மூத்த ஊடகவியலாளர் வேல்தஞ்சனை சுன்னாகத்தில் களமிறக்கி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது தேசிய மக்கள் சக்தி!

 யாழ் மாநகரசபை முதல்வர் வேட்பாளருக்கு பொருத்தமானவராக காணப்படுபவர் என, யாழ் பல்கலைக்கழகத்திலும் அதற்கு வெளியேயும் தேசியமக்கள் சக்திக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர்களால் கருதப்படும் பேராசிரியர் கபிலனை முதன்மை வேட்பாளராக களமிறக்கிய தேசியமக்கள் சக்தி மற்றுமொருவரை சுன்னாகம் பிரதேசசபையில் களம் இறக்கி அதிரடி காட்டியுள்ளது. மூத்த ஊடகவியலாளரான கனகநாயகம் வேல்தஞ்சனை சுன்னாகம் பிரதேசசசபை முதன்மை வேட்பாளராக தேசியமக்கள் சக்தி களமிறக்கியுள்ளது. குறித்த ஊடகவியலாளர் பிரபல தொலைக்காட்சிகள், பத்திரிகை நிறுவனங்கள் போன்றவற்றில் கடமையாற்றியதுடன் இவர் ஏதாவது கலந்து கொள்ளும் நேர்காணல்கள் மற்றும் ஊடக சந்திப்புக்களில் ஏனைய ஊடகவியளார்களைப் போல் அல்லது குறுக்கு கேள்வி கேட்டு பேட்டி கொடுப்பவர்களை திணறடிக்கும்படியாக துளைத்து எடுப்பவர் என்பது பலருக்குத் தெரிந்திருக்கும். சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனைகளுக்குப் பின் பிரபலமாக வைத்தியர் அர்ச்சுனாவையும் இவர் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி எடுத்து பரபரப்பு காட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாகத்துறையில் மாஸ்டர் பட்டம் பெற்ற இலர் ஆங்கிலத்திலும் சிறப்புத்தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுன்னாகம் பிரதேசசபை சைக்கிள் மற்றும் சங்கு, வீடு ஆகியவற்றின் முக்கிய இலக்காக உள்ளது. இவற்றின் இலக்குகளை எல்லாம் தகர்த்து எறித்து தேசிய மக்கள் சக்தி அங்கு வெற்றி வாகை சூடி  வேல்தஞசன் தவிசாளர் பதவியேற்கும் நிலை வந்தால் அவரை தேசியமக்கள் கட்சி தனது கைப் பொம்மையாகப் பயன்படுத்துமா? அல்லது வேல்தஞ்சனின் போக்கில் விட்டுவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வேல்தஞ்சன் வட்சப் குறுாப் ஒன்றில் பதிவிட் பதிவு ஒன்றையும் நாம் இங்கு தந்துள்ளோம்…

பெலாரஸ் நாட்டுக்கு தம் பிள்ளைகளை அனுப்பி பெரும் பணச் செலவு செய்து உயர் கல்வி ஊட்டும் யாழ்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களின் சக பெற்றோரே ! இதை அவசியம் படியுங்கள் !

இலங்கைப் போர் முடிவுக்கு வந்த பின்னர், மற்றுமொரு போர் எல்லையில் இருக்கும் பெலாரஸ் நாட்டுக்கு சென்றல்லவா யாழ்ப்பாணத் தமிழ் மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் ?

அவர்களின் கவலைகள், மகிழ்ச்சிகள் முதலியன இலங்கை உள் நாட்டு நிலைவரங்களுடன் மட்டுமல்ல சர்வதேச அரசியல், இராணுவ விவகாரங்களிலும் தங்கியுள்ளன !

எழுதுபவர்:
கனகநாயகம் வேல்தஞ்சன்
Visiting Academic ( OUSL)
BA(OUSL), MPA (Post Graduate Institute of Management-PIM, Sri Jayewardenepura University) Dip.in Journalism(Jaffna),
Diploma in Human Rights(CPR),
Cert.in Post-conflict Strategies & Peace building(USIP)

இலங்கை மாணவர்கள்-தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் பலர் பெலாரஸ் நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆங்கில மொழிமூலம் மருத்துவம் படிக்கிறார்கள்.

நான் வடமாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தில் பணியாற்றிய காலத்தில் அங்கு என்னுடன் பணியாற்றிய அலுவலர் ஒருவரின் மகனும் பெலராஸ் நாட்டின் மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றில் படிக்கத் தொடங்கியிருந்தார்.

தந்தை பகலிரவாக மிகக் கஸ்டப்பட்டு உழைத்து மகனின் படிப்புச் செலவை அனுப்பிக் கொண்டிருந்தார். இலங்கை நாணயத்தை அமெரிக்க டொலருக்கான நாணய மாற்று விகிததில் தான் பெலாரஸுக்கு அனுப்புவார்.

உலகளாவிய கொறோணாப் பெரும் தொற்றும் பின்னர் இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டமையும் ஒரு தந்தைக்கு தன் மகனின் ஆரோக்கியம், உணவுக்கும் படிப்புக்குமான நிதியை அனுப்புதல் ஆகியவை தொடர்பில் அதிக மனப்பாதிப்பை ஏற்படுத்தித்தானிருக்கும்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை ரூபாயின் மிக அதிகரித்த பணவீக்கம் காரணமாக நாணயச் சந்தையில் டொலருக்கான விலை இலங்கை ரூபாயில் அதிகளவில் அதிகரித்தது. இலங்கைப் பணம் விரைவில் பெறுமதியிழக்கத்தொடங்கியது. அப்பொழுதும் கூட அதிகரித்த நாணய மாற்று விகித்தத்தில் மகனுக்கு அனுப்பவேண்டிய அளவு டொலரின் அளவை அனுப்பிக்கொண்டே இருந்தார். இரவில் நித்திரை விழித்து யாழ் நகரில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கஸ்டப்பட்டு வேலைசெய்து மகனுக்கு கல்விச் செலவை டொலரில் அனுப்பிக்கொண்டே இருந்தார்.

ஆனால் பகலில் அலுவலகத்திலும் தன் கடமையை உற்சாகமாகவும் சரியாகவும் சிரித்த முகத்துடன் ஆற்றுவார்.

பொதுவாழ்விலும்(அலுவலகத்திலும்) தனிப்பட்ட குடும்ப வாழ்விலும் அவரது அர்ப்பணிப்பையும் கடமையுணர்வையும் கண்டு வியந்துள்ளேன்.

கொரோணா நிலைவரம், இலங்கையின் பொருளாதார நெருக்கடி ஆகியவை மட்டும் சவால்களை ஏற்படுத்தவில்லை !

போரில் ஈடுபடும் ரஸ்யாவின் கிழக்கு எல்லையிலும் உக்ரெயினின் வடக்கு எல்லையிலும் பெலாரஸ் அமைந்திருந்தது. பின்வரும் Links இல் பெலாரஸ் பற்றி காணலாம்.

https://images.app.goo.gl/ZhKs

உக்ரெயின்- ரஸ்ய போரில் மட்டுமல்ல சோவியத் யூனியன் உடைந்த காலத்திலிருந்து பெலாரஸ் நாடு ரஸ்யாவுக்கு மிக விசுவாசமான நாடு. தனது பாதுகாப்பு உத்தரவாதங்களை ரஸ்யாவிடம் ஒப்படைத்த நாடு. ரஸ்யாவுடன் இராணுவக்கூட்டு வைத்துள்ள நாடு. 7 மாதங்களுக்கு முன்பு உக்ரெயின் அரசாங்கம் , பெலாரஸ்- உக்ரெயின் எல்லையில் ஒன்றே கால் இலட்சம் இராணுவத்தைக் குவித்து வைத்துள்ளது எனும் விமர்சனத்தையும் பெலாரஸ் ஜனாதிபதி முன்வைத்தார். ஆனால் உக்ரெயின் அந்த விமர்சனத்தை நிராகரித்ததுடன் தாங்கள் வழமைபோலவே எல்லையில் தமது துருப்புக்களின் தொகையை பேணுவதாகவும் தெரிவித்திருந்தது. Link ஐ அழுத்திப் பார்க்கவும்.

ஆனால் அதேவேளை பெலாரஸ் அரசு , உக்ரெயின் நாட்டை முழு எதிரி நாடு போல பார்க்கவில்லை. பெலாரஸ் ஜனாதிபதி, ரஸ்யா விரும்புமெனில் போரிடும் இரு நாடுகளுக்கு மத்தியில் மனிதாபிமான அனுசரணையாளாகச் செயற்பட்டு போர்க் கைதிகள் பரிமாற்றத்திலும் சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு விடயத்திலும் உதவி செய்ய விரும்புவதாக நாலு மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை உக்ரெயின் ஜனாதிபதி செலன்ஸ்கி அவர்களும் ஏற்றுக் கொண்டிருந்தார்.

ரஸ்யப் படைகள் போரில் உக்ரெயினின் பல பகுதிகளைப் பிடித்துவிட்டாலும் அதனை பெலாரஸ் ஜனாதிபதி கருத்தியல் ரீதியில் ஆதரித்திருந்தாலும் உக்ரெயின் அரச படைகள், ரஸ்ய ஆதரவு நாடான பெலாரஸ் மீது தாக்க எள்ளளவும் முனையவில்லை.
ரஸ்ய ஜனாதிபதியின் நிலைப்பாடுகளை ஆதரித்து பெலாரஸ் ஜனாதிபதி தங்கள் பாராளுமன்றத்தில் எப்படி உரை நிகழ்த்துகிறார் என்பதை பின்வரும் இணைப்பில் பாருங்கள்…. இந்த உரை சில மாதங்களுக்கு முந்தியது. ரஸ்ய ஆதரவு நிலைப்பாட்டில் அவர் எவ்வளவு உறுதியாக உள்ளார் என்பதும் ரஸ்யப் பிராந்தியத்தின் கேந்திர பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்பதால் ரஸ்யப் படைகள் கைப்பற்றிய கிறைமியாவும் ஏனைய நாலு மாகாணங்களின் பிரதேசப்பகுதிகளும் ரஸ்யாவால் உக்ரெயினுக்கு மீளளிக்கப்பட மாட்டா என்றும் என்றும் அவர் தெளிவாகப் பேசுகிறார் ! பாருங்கள் ! அதேவேளை மனிதப் பேரழிவை நிறுத்தவேண்டுமென்றால் போர் நிறுத்தப்படுதல் மிக அவசியமானது என்பதையும் அவர் பலமாக் வலியுறுத்துகிறார்.

அந்த அளவுக்கு அப் போர் அயல் நாடுகளுக்கு மூர்க்கத் தனமாக விஸ்த்தரிக்கப்பட்டிருந்தால் இலங்கை மாணவர்களின் மருத்துவக் கல்வி குழம்பியிருக்கும். அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகியிருக்கும். அதிஸ்டவடமாக அவ்வாறு நிகழவில்லை என்று கூறமுடியாது. அவ்வாறு நிகழாமைக்குக் காரணம், பெலாரஸ் ஜனாதிபதி, ரஸ்ய விசுவாசி என்றாலும் உக்ரெயின் மக்களை அவர் பெரிதும் மதித்தே நடந்தார். உக்ரெயின் அனுபவிக்கும் போர் நெருக்கடிகளின் மனிதாபிமானப் பக்கங்களை அவர் புரி ந்திருந்தார். இத்தகைய உயர் அரசியல் பண்புகள் சோவியத் காலத்து கொம்மியூனிச அரசியல் பாரம்பரியத்தால் அனுபவத்தால் அவரிடம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளவை.

பின்வரும் Link இல் மேலும் அறியலாம்.

ரஸ்ய- உக்ரெயின் போர் நிலைவரங்களை ஆரம்பம் முதல் சர்வதேச செய்தி ஊடகங்களில் அறிந்துகொண்டேதான் நானிருந்தேன். தினமும் இலங்கையின் பொருளாதர நெருக்கடி பற்றியும் நான் துல்லியாக அறிவதில் அக்கறை கொண்டிருந்தேன். என்னை நன்றாய் அறிந்த அந்த அலுவலக வட்டத்துக்குள் இருந்த சில சக அலுவலர்களில் அந்த தந்தையும் இருந்தார்.

அவர் என்னிடம் தினமும் வந்து விடயங்களை அறிந்துகொள்வார். அத்துடன் தான் படும்பாடுகளை ஏதோ ஒருவகையில் ஒழித்து மறைக்காமல் ஓலமோ ஒப்பாரியோ இன்றி….மிக நேர்த்தியாகவும் அழகாகவும் சொல்லி முடிப்பார். அவர் என்னுடனான உரையாடலில் கவலைகளைக் கொட்டித்தீர்ப்பவராகவோ அல்லது அழுது புலம்புவராகவோ யாருக்கும் தோற்றம் காட்டமாட்டார். அத்துடன் நோய்வாய்ப்பட்ட தனது வயதான பெற்றோரை தான் பராமரிக்கும் பொறுப்புக்களையும் கூறுவார்.

துல்லியமாக உள்ளூர், சர்வதேச நிலைவரங்களை அறியும் உற்சாகமும் உறுதியும் மட்டுமே அவரிடம் இருக்கும். அவரது அந்த இயல்பு எனக்கு மிகவும் பிடித்தது.

பெலாரஸ்ஸில் படிக்கும் மகன் என்ன சாப்பிடுகிறான், எப்படிச் சிக்கனமாக, எவ்வளவு செலவழித்து மூவேளையும் சாப்பிடுகிறான், எள்ளளவும் விலைகூடிய உணவுகளை அவன் எடுப்பதில்லை முதலிய விடயங்களையும் அத்துடன் இலங்கையில் படிக்கும் தனது பிள்ளைகளுக்கான பொருளாதாரச் செலவுகள் முதலிய எல்லா விடயங்களையும் என்னுடன் பகிர்வார்.

அந்த சக அலுவலர் எல்லா அலுவலர்களுடனும் மிக்க சகோதரத்துவத்துடன் பழகியவர்.

என்னுடன் கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் படித்த சக மாணவி ஒருத்தி, அதே கல்லூரியில் படித்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து டாக்டராகி இலங்கையில் சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் தனது மைத்துனரை திருமணம் செய்தாள். அவர்களின் மகன் ஒருவனும் பெலாரஸ் நாட்டில் மருத்துவம் படிக்கிறான்.

எனக்கு தெரிந்த மேலும் பல தமிழ்க் குடும்ப ங் களின் பிள்ளைகளும் பெலாரஸ் நாட்டில் மருத்துவம் படிக்கின்றனர்.

இலங்கையில் தேசிய மக்கள் சக்தியின்(NPP) ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்கா தோழர் ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்களால் தெரிவு செய்யப்பட்டதும் அவர் பதவியேற்றதும் தொடர்ந்து பாராளுமன்றத்தேர்தலில் NPP வென்று அரசாங்கம் அமைத்ததும் தொடர்ந்து இலங்கை ரூபாய் உறுதி நிலையடைந்ததும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி குறைந்தமையும் இலங்கையின் சமூக அரசியலும் பொருளாதார நிலைமைகளும் ஸ்திரமடைந்தமையும் NPP அரசின் ஊழல் மோசடி ஒழிப்பு நடவடிக்கைகளும் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்பட்ட மையும் அத் தந்தையர்கள் போன்ற நிலைமையில் உள்ளவர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி கொடுத்திருக்கும்.

ரஸ்ய- உக்ரெயின் போர் நிறுத்தப்படும் சாத்தியங்கள் ஏற்பட்டுள்ளமையும் ரஸ்ய- உக்ரெயின் சமாதானப் பேச்சுக்கள் ஆரம் பி த் திருப்பதும் கூட அத்தந்தையரின் நிலையில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் தான் !

இப்பொழுது பெலாரஸ் நாடு பற்றிய செய்தி ஒன்றை சுருக்கமாகப் பகிர்ந்து கொள்கிறேன். (விரிவாக ஆங்கில மூலம் அறியலாம்)

ஒன்பது மில்லியன் மக்களைக் கொண்ட பெலாரஸ் நாட்டின் ஜனாதிபதி ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அவர்களின் உற்ற தோழன். உக்ரெயின்- ரஸ்ய போரில் ரஸ்ய படைகளுக்கு பூரண ஆதரவு வழங்குபவர். ரஸ்ய படைகள் பெலாரஸ் நாட்டில் ஏற்கனவே நிலைகொண்டுள்ளன. அந்நாட்டுத் தலைவர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஏழாவது முறையாக பெலாரஸ் ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

அந்த நாட்டின் ஸ்திரமான அரசியலும் பொருளாதாரமும் உரிய அளவிலான ஜன நாயகப் பண்புகளும் அரசியல் ஒழுக்கமும் அந்த நாட்டு மக்களுக்கும் அங்கு படிக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் அவசியமல்லவா?

இந்த அளவுக்கு ஊனும் உயிருமாய் சர்வதேச தேச மாற்றங்கள் எங்கள் உள்ளூர் வாழ்க்கையுடன் இணைந்துள்ளன.

(Belarus leader Alexander Lukashenko was sworn in for the seventh time as the president of the nine-million-strong post-Soviet nation)