புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் கைதிகளுக்கு கஞ்சா வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது !

மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதிகளுக்கு கஞ்சா கட்டுக்களை வழங்க முற்பட்டவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அவரை இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர், நேற்று மாலை வழமைபோன்று கைதிகளுக்கு சலவை செய்த ஆடைகளை வழங்கியுள்ளார். இதன்போது, குறித்த ஆடைகளுக்குள் இரண்டு கஞ்சா கட்டுகள், 3 கையடக்கத் தொலைபேசிகளையும் அவர் மறைத்து வழங்கியமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.