மீரிகம – நீர்கொழும்பு பிரதான வீதியின் நுகவெல சந்தியில் அமைந்துள்ள புனித செபஸ்டியன் உருவச்சிலையை சேதப்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் நீண்ட நேரமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் 10 சிறப்பு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணைகளை ஆரமப்பித்துள்ளதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் சுமார் 25 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டான-கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியன் தேவஸ்தானத்திற்கு அருகில் உள்ள குறித்த உருவச்சிலையை நேற்றைய தினம் இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டது.




