புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

சிங்கப்பூர் தூதரகங்கள் முன்பாக கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த தமிழர்கள் முஸ்தீபு!

உலகின் முக்கிய நாடுகளில் உள்ள சிங்கப்பூர் தூதரகங்களுக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளில்

ஈடுபடுவதற்குத் தமிழ் அமைப்புகள்

தயாராகி வருகின்றன.

போர்க் குற்றங்களில் தொடர்புடைய சிறிலங்காவின் முன்னாள் அதிபர்

கோட்டாபய ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு அடைக்கலம் அளித்திருப்பதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தும், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அவரைக் கைது செய்து உலக நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கேட்டுமே ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு

அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

அமெரிக்காவிலும் லண்டன் மற்றும்

பாரிஸ் நகரங்களிலும் 18 ஆம் திகதி

திங்கட்கிழமை சிங்கப்பூர் தூதரகங்கள் முன்பாகத் தமிழர்கள்

ஒன்று கூடி எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளனர். ஏனைய சில நாடுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பாடாகி வருகின்றன.

கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்கு

தனிப்பட்ட பயணமாகவே வந்துள்

ளார் என்றும் அவர் அந்நாட்டில் தஞ்சம் கோரவில்லை. அவ்வாறு தஞ்சம் வழங்கும் சட்டங்கள் அங்கு

கிடையாது என்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவருக்கு சாதாரண வருகை அனுமதியே

(social visit pass) வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையர்கள் எவரும் சிங்கப்பூரில் வீஸா இன்றியே முப்பது நாட்கள் தங்கியிருக்க முடியும். தற்சமயம் அங்கு தங்கியுள்ள கோட்டாபய வேறு நாடுகளுக்கு வெளியேற முயற்சிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரின் சட்டங்கள் அந்நாட்டில்

தங்கியிருப்போர் அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடுவதைத் தடைசெய்துள்ளதால்

கோட்டாபயவுக்கு எதிராக அங்குள்ள

ஈழத் தமிழர்களால் பெருமெடுப்பில் போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமை உள்ளது.

போர்க் குற்றவாளி எனக் குற்றம் சுமத்தப்படுகின்றவரான கோட்டாபய முதல் முறையாக ஜனாதிபதிக்கான விசேட கைதுத் தவிர்ப்புக் காப்புகளோ (immunity from arrest) வேறு அதிகாரங்களோ

அற்றவராக – அவற்றை இழந்த நிலையில் – தனியாளாக-நாட்டுக்கு வெளியே வந்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் மீதான போர்க் குற்றஙகளை சர்வதேச அரங்கில் உரத்து எழுப்பவும் அவருக்கு அடைக்கலம் தர முயலும் நாடுகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும் இது ஒரு சரியான சந்தர்ப்பம் என்பதைத் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பொருத்தமான இந்த நேரத்தில் வெளிநாடுகளில் தமிழர்களின் வெகுஜன எழுச்சி எதிர்பார்த்த அளவுக்கு வெளிக்கிளம்பவில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியுள்ளனர்.