புதினங்களின் சங்கமம்

மாட்டுக் கள்ளருக்கு ஆதரவாக போலி பேஸ்புக் பதிவினை பகிர்ந்து வெருளி வேலை பார்த்த பைத்தியர் அர்ச்சுனா!!

இது அருச்சுனாவுக்கு எதிராக சமூகவலைத்தளத்தில் கருத்து வெளியிட்ட ஒருவரின் பதிவாகும்….

எந்த அலுவலும் ஒழுங்காகப் பார்ப்பதில்லை…. பாராளுமன்றம் போவதற்கு முன் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூடத் தெரியாத நிலையில் உள்ள அர்ச்சுனா வெங்காயம் உள்ளூராட்சி தேர்தலிலும் விசர்க்கூத்தாடி வேட்புமணுக்களை நிராகரிக்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அர்ச்சுனாசின்னவெங்காயம் போல உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாட்டியும் கண்ணால கண்ணீர் வரும் அளவுக்கு வதைத்துவிடும். ஆனால் வன்னி ஊழல் ஒழிப்பு அணி என்று ஒரு சில பெரிய வெங்காயங்களால் நடாத்தப்படும் இரு பேஸ்புக் பக்கங்கள் தொடர்பாக மக்கள் பரபரப்பாக தற்போது கதைத்து வருகின்றார்கள். அதற்கு காரணம் பைத்தியர் அர்ச்சுனா என்ற சின்ன வெங்காயம் செய்த வேலைதான். குறித்த பேஸ்புக் பதிவுகளை தனது பேஸ்புக்கில் பகிர்ந்து அந்த இரு பெரிய வெங்காயங்களையும் பரபரப்பு பக்கமாக மாற்றியுள்ளது அருச்சுனா வெங்காயம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்குரிய சிறப்புரிமையைப் பயன்படுத்தி நெல்லியடிப் பொலிசாரிடம் விபரங்களைக் கேட்டடிருந்தால் அவர்கள் விளக்கமாக பதில் கூறியிருப்பார்கள். அத்துடன் அவர்களால் எடுக்கப்பட்ட அந்த வீடியோவின் முழு விபரத்தையும் கொடுத்திருப்பார்கள். ஆனால் பூழலுக்கு எதிரான அமைப்பு வன்னியின் பதிவுகளை பேய்த்தனமாக பதிவு செய்து பைத்திய வேலை பார்த்துள்ளார் அருச்சுனா….

நாம் ஏற்கனவே வெளியிட்ட பதிவு

பைத்தியர் அர்ச்சுனா அவர்களே!! கண்டபடி பூழல் ஒழிப்பு அணி வன்னி  பேஸ்புக் பக்க பதிவுகளை பகிர்ந்து விசர்க் கூத்தாடாதீர்கள்!! பெண்களுக்கு பொலிசார் அடித்தார்களா? வீடியோ

குறித்த வீடியோவைப் பதிவு செய்து பின்வருமாறு கருத்திட்டுள்ளார்….

பெண்களுக்கான நீதி என்று என் குரலை ஒழித்த இந்த என் பி பி கூட்டம் இந்த வீடியோவிற்கான பதிலையும் சொல்லியே ஆக வேண்டும்
திட்டமிட்ட ரீதியில் சக இன மக்களை பாராளுமன்றத்திற்கு அழைத்து முறைப்பாட ஒன்றை எழுதி எடுத்து என் குரல்வலையை நசித்து இருக்கிறார்கள்
ஊழல் ஒழிப்பு அணி வன்னியின் எந்த ஒரு பதிவையும் இனிமேல் பகிரக்கூடாது என்று நினைத்து இருந்தேன்.
ஆனால்,
இந்த வீடியோவினை பார்க்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் கௌரவ அமைச்சர் சந்திரசேகரர் போன்றவர்கள் எங்களுடைய இனத்தின் கோடாலி காம்புகள் என்பதற்குரிய மிகச்சிறந்த உதாரணம் இந்த போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான பெண்கள் மீதான இந்த நடவடிக்கை.
உங்களுக்கு ஞாபகம் இருக்கும் பெண்கள் தொடர்பாக நான் பிழையாக கதைக்கிறேன் என்று சொல்லியே விமல் ரத்ன நாயக் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேல் குறிப்பிட்டவர்களின் தோழர் என்று செல்லமாக அழைக்கப்படுபவர் பாராளுமன்றத்தில் என் குரலை திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கி இருந்தார்.
இந்தக் கோடாலி காம்புகளுக்கு நன்றாக தெரியும், நான் பாராளுமன்றம் போனால் இவ்வாறான விடயங்களை மிகவும் தெளிவாக சிங்கள மக்களுக்கு விளங்கும் விதத்திலும் கதைப்பேன் என்று.
இவர்களுக்கு உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவை மட்டுமல்ல இந்த கோடாலி காம்புகளின் தமிழின இன வழிப்புக்கு நான் முட்டுக்கட்டையாக இருப்பேன் என்பதுதான் இவர்களுடைய மிகப்பெரிய பிரச்சனை.
வடமராட்சி என்பது எமது தலைவன் பிறந்த இடம். தலைவனின் பெயரை சொல்லி வடமராட்சி மக்களின் முக்கியமாக நெல்லியடி வல்வெட்டி துறை பருத்தி துறை மக்களின் வாக்கினைப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கும் இந்த நான்கு கோடாலி காம்புகளும் எமக்கான பதிலை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளை கதைக்க கூடியவன் பாராளுமன்றத்தில் கதைக்கவும் முடியாது.
போடப்பட்ட 11 உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் விண்ணப்பங்களில் பத்தினை நிராகரித்திருக்கிறார்கள்.
மூன்று கிலோ மீட்டர் ரோட்டினை போடுவதற்கு வக்கில்லாத இந்த அரசாங்கம் முன்னூறு கிலோமீட்டர் ரோட்டுக்கான பிளானை போடுகிறது.
மீன்பிடி தொழிலை ஆதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப வதற்காக ஒதுக்கப்பட்ட 250 மில்லியன் அது தவிர மயிலிட்டி துறைமுகத்தை சீரமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட 200 மில்லியன் இவையெல்லாம் எங்கே போனது எங்கே போகிறது என்று தெரியாது.
கேட்பவனை குரல் வளையை நெரித்து கொலை செய்கிறார்கள்.
பெண்களை வீடு புகுந்து எந்த நீதிமன்ற உத்தரவு இல்லாமல் காலால் உதைக்கிறார்கள்.
இதைக் கேட்பதற்கு திராணியற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதினைந்து வருடங்களாக தமிழ் மக்களுக்கு எதிராக அரசியல் விபச்சாரம் செய்கிறது.
இவையெல்லாம் எங்கே சென்று முடிய போகிறது.
நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
பருத்தித் துறையிலே போடப்படுகின்ற ஒவ்வொரு வாக்குகளும் மிகவும் சிந்திக்கப்பட்டு போடப்பட வேண்டும்.
இன்று நடந்த பிரதேச சபை ஒழுங்கமைப்பு கூட்டத்திலே மூன்று கிலோ மீட்டர் கூட போடுவதற்கு காசு இல்லாமல் தேர்தல் நேரம் என்பதால் மக்கள் வாக்கினை பெறுவதற்காக நாங்கள் அந்த இடத்திற்கு வந்து பார்க்கிறோம் நாங்கள் அந்த இடத்திற்கு வந்து பார்க்கிறோம் என்று ராஜீவன் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
இவர்கள் பார்ப்பதால் பாதைகள் போடப்படுமாக இருந்தால் இவர்கள் கடவுளின் அவதாரமாக இருக்க வேண்டும்
குறைந்தது பாராளுமன்றத்தில் ஆவது கதைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
அல்லது ஒருவன் கதைக்கிறான் என்றால் அவனை பொய் குற்றச்சாட்டுகள் போட்டு அவன் குரல்வழியை நெரிக்கத் தெரியாமல் இருக்க வேண்டும்.
தமிழர்கள் மிகவும் தெளிவாக சிந்திக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு இனிமேலும் நீங்கள் ஜேவிபி அல்லது என் பி பி க்கு வாக்கு போடுவீர்களாக இருந்தால் எம்மை விட முட்டாள்கள் இந்த உலகத்தில் இருக்க முடியாது.
சற்று சிந்தியுங்கள்.