யாழில் வாள் வெட்டுக் காவாலி பிடிபட்டது எப்படி? சர்மினி லோயரின் காரில் இருந்தது யார்? Photos
கடந்த 3ம் திகதி யாழ் கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவருடைய கை வெட்டப்பட்டது. குறித்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கை பொருத்தப்பட்டது. இந்தக் குற்றச் செயலில்ஈடுபட்ட பிரதான சந்தேக நபர்கள், யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கீழ் இயங்கும் மாவட்ட
பொலிஸ் புலனாய்வுபிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல்களையடுத்து சந்தேக நபர்கள் மறைந்திருக்கும் இடங்கள் யாழ்ப்பாணம் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் கெலும்பண்டார அவர்களின் தலைமையில் சுற்றி வளைக்கப்பட்டது. சுற்றி வளைப்பில் மூவரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் விசாரித்து அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் கெரோயின் போதைபொருள் கைப்பற்றபட்டது.
இன்னொருவரை சட்டத்தரணி சர்மினி பொலிஸ் நிலையத்திற்கு தனது காரில் கொண்டுவந்து பாரப்படுத்தினார். அவரிடம் இருந்து விசாரனையின் பின் வாள் எடுக்கபட்டது. இவர்களிடமிருந்து இரண்டு மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. மேலதிக விசாரனையின் பின் நீதிமன்றில் இவர்கள் முற்படுத்தபடுவார்கள்.
குறித்த வாள்வெட்டுக்குழு காவாலிகளுக்கு ஆதரவாக ஆயராகி காரில் சந்தேகநபரைக் கொண்டு வந்த சட்டத்தரணி சர்மினியின் நடவடிக்கை தொடர்பாக மக்கள் பெரும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.



