பூனா” … “சூனா” என்று ஏச மனைவி தோசை சுட்டுத் தருவா…யாழில் பதறவைக்கும் உண்மைச் சம்பவம்!! Video
இது முகப்புத்தகம் ஒன்றில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தெரிவித்த கருத்தாகும். அப்படியே அதனை நாம் தருகின்றோம்.
மனதை பதறவைக்கும் உண்மைச் சம்பவம்: முதலில் யாழ்ப்பாணம் அல்லது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு பணக்கார குடும்பத்தை நோட்டம் இடுவது. யாரை பலிகடாவாக்க இருக்கிறோம் என்று தெரிவு செய்து. அது ஆணாக இருந்தால், அன் நபர் என்னை கற்பழித்துவிட்டார் என்று, வறுமையில் வாடும் ஒரு பெண்ணுக்கு காசைக் கொடுத்து பேட்டி எடுப்பது. (முகத்தை சரியாக காட்டமாட்டார்கள்) பின்னர் அதனை யூ-ரியூப் மற்றும் சமூக வலையத்தளங்களில் பரவ விடுவது. இதனை பார்த்த அந்த குடும்பத்தார் பதறி அடித்து, தங்கள் மானம் காற்றில் பறப்பதை நினைத்து அழுதவாறு, இந்த ஊத்தை சேதுவுக்கு போன் அடிப்பார்கள்.
வழமையாக தொடர்பு கொள்ள என்ற வாசகத்தோடு இவர் டெலிபோன் நம்பரும் இணையத்தில் இருக்கும். அந்த டெலிபோன் நம்பருக்கு அடித்து மனைவி, பிள்ளைகள், அப்பா அம்மா என்று பலதரப்பட்டவர்கள் கதறி அழுவார்கள். ஆனால் இவனோ நோர்வே ஓசிலோவில் உள்ள கவுன்சில் குடியிருப்பு மாடியில் அப்படியே மல்லாக்காக இருந்துகொண்டு அவர்களோடு தூசனத்தில் பேசுவான்… வீடியோவை தூக்க 10 லட்சம் தாருங்கள். 7 லட்சம் தாரலாமே என்று பேரம் பேசுவான். ஆனால் அங்கே நடக்கும் எந்த பிரளயத்தையும் கண்டு கொள்ளாமல், ஊத்தை சேதுவின் மனைவி தோசை சுட்டுக் கொண்டு வந்து கொடுப்பாராம். சம்பவத்தை நேரில் பார்த்த அவனது சகா தெரிவித்த செய்தி இது.
இப்படி பல நூறு பேரின் வாழ்கையில் விளையாடிய பிசாசு. பல நூறு பேரின் கண்ணீரில் ஜாலியாக நீச்சலடித்த கூட்டம் இது. இன்ரர் நெட் என்னும் நவீன உலகத்தின் மிகச் சிறந்த, ஒரு சேவையை. எவ்வளவு கேவலமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு கேவலமாக பயன்படுத்தி அதனூடாக வயிறு வளர்த்த ஆசாமி தான் இந்த ஊத்தை சேது. இவன் தான் இப்படி என்றால் இவனது குடும்பமும் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. கீழ் காணும் வீடியோவைப் பாருங்கள், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரையும் சேதுவின் மனைவி தாக்கியுள்ளார். இந்த ஊத்தை சேது,, பல பெண்களின் போட்டோக்களை எடுத்து ,, போட்டோ ஷாப்பில் போட்டு வேறு ஆண்களோடு தொடர்பில் இருப்பது போல செய்வதும். அந்த ஆண் தற்போது இந்தப் பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாக சொல்லும் பொய்யான ஒலி நாடா ஒன்றையும் தயாரித்து வெளியிடுவான்.
பின்னர் அந்தச் செய்தியை மற்றும் வாய்ஸ் ரக்கோடிங்கை தூக்க காசு கேட்ப்பான். இப்படி தமிழர்களுக்கு மத்தியில் பெரும் விஷக் கிருமியாக இருந்தவனுக்கு கிளிநொச்சி அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பல வெளிநாட்டவர்கள் இலங்கை பொலிசாருக்கு சேது தொடர்பாக தாம் பாதிக்கப்பட்ட விடையங்களை முறைப்பாடாக செய்து வருகிறார்கள். இதுவரை 23க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில். நீங்களும் பாதிக்கப்பட்டிருந்தால் உடனே முறைப்பாடு செய்யுங்கள்.
ஊத்தை சேதுவின் மனைவியும் தகப்பனும் செய்யிற வேலை இதுல இருக்கிறது…
இதே வேளை இவனை பிணையில் எடுப்பதற்கு விஜயகலா தலைகீழா முயன்று வருகின்றாள். இவன் மீது புகார் கொடுத்த இருவருக்கு பல லட்சம் ரூபா பேரம் பேசப்பட்டு அவர்களை குறித்த புகார்களை எடுக்க முற்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை நாளை இவனை பிணையில் எடுப்பதற்கு பெருமளவு பணம் கொடுத்து சட்டத்தரணிகளை கொண்டு வந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.