என்னடா இது?? வற்றாப்பளை அம்மாளாச்சிக்கு வந்த சோதனை!!
5G ஸ்மார்ட் போல் விவகாரம்.
இது ஓர் ஆச்சரியமான அபிவிருத்தித்திட்டம். இந்தத் திட்டத்திற்கு அனுமதியளித்தவர் யாரென்று தகவல் தொடர்பு ஆணைக்குழுவுக்கு தெரியாது. வடக்கில் பொதுத் தலைக்கொன்றாக காவலில் நிற்கும் இராணுவத்துக்கு தெரியாது. சத்தமாக வாயு பறிஞ்சாலே விசாரணைக்கு விரையும் புலனாய்வாளர்களுக்கு தெரியாது. எல்லாம் ஏன் ஆளுநர் ஐயாவுக்கு கூட தெரியாது. எனவே இது இலங்கையில் கடவுளால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித்திட்டம் எனக்கொள்க.
பொதுவெளியில் இடம்பெறும் அபிவிருத்தித்திட்டம் தொடர்பில் மக்களுக்கு அதிருப்தியோ, சந்தேகமோ இருப்பின் அது தொடர்பான விளக்கத்தை சம்பந்தப்பட்ட தரப்பு மக்களுக்கு வழங்குதல் ஜனநாயக அறத்தின் அடிப்படை. ஆனால் இங்கு அப்படியல்ல. உனக்கென்ன சந்தேகம், சாவோ வாழ்வோ நான் செய்வன். கத்திப்போட்டு சா…என்ற கணக்கில்தான் எல்லா நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. இது ஒருவகையான சர்வாதிகார முறை. பல்தேசிய கம்பெனிகளின் பணத்துக்காக மட்டும் இயங்கும் மாபியாக்களின் அரசு நடத்தும் ஆட்சி. சாதாரண பொதுமகன் யாரிடமும் எந்தக் கேள்வியும் எழுப்பமுடியாது. விரும்பினால் தனது ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் கொட்டித்தீர்த்துவிட்டு, ஆதரித்தோ எதிர்த்தோ கருத்திட்டுவிட்டு குனிந்து நடக்க வேண்டியதுதான். அதைத் தீர்மானிப்பதும் விதானையார்தான் என்பதை மறக்க வேண்டாம்.
பொதுவாக அரசுகள் வெளிச்சக்திகளின் அபிவிருத்தித் திட்டங்களை நாட்டுக்குள் அனுமதிக்கும்போது, நாட்டுமக்களுக்கு இவற்றால் ஏற்படும் நன்மைகள் என்ன, தீமைகள் என்ன, நீண்டகால நோக்கில் பாதிப்பற்றதா என்பன குறித்தெல்லாம் பரீட்சித்தே அனுமதிப்பார்கள். ஆனால் இங்கு அப்படியான எந்தப் பொறிமுறையும் இல்லை. இப்படியே போனால் உலகளவில் ஒப்பிடும்போது சிறிய சனத்தொகையைக் கொண்ட இலங்கை விரைவிலேயே சுடுகாடாகிவிடும். அல்லது சோமாலியாவாகிவிடும். இப்போதைக்கு உலகிற்கு அதுவே தேவைப்படுகிறது.
படம் – இது இற்றைக்கு 8 மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மன் ஆலயத்தில் நிறுவப்பட்ட 5G கோபுரம். சன நெரிசலுள்ள பகுதிகளில் இலகுவில் இணைய வசதியை வழங்குவதற்கென நிறுவப்படுவதாக சொல்லப்படும் இந்தக் கோபுரமானது வற்றாப்பளை, நந்திக்கடல் பகுதிகளில் இரண்டு பக்கங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. திருவிழாக் காலங்களை தவிர அங்கு மக்களை காண்பது மிக அரிது. திருவிழா காலங்களிலும் இணையத்தை பயன்படுத்தி பிசியா அங்கு எதுவும் நடைபெறுவதில்லை. இப்படியான இடத்திற்கு ஏன் 5G கோபுரம், யார் அனுமதி கொடுத்தது எனப் பிரதேச சபையைக் கேட்டால் தங்களுக்கும் தெரியாதாம்….!
என்னடா அம்மாளாச்சிக்கு வந்த சோதனை.
நன்றி
ஜெரா பேஸ்புக் பதிவு

