சற்றுமுன்னர் சிறைக்காவலர் சுட்டுக்கொலை! வெலிக்கடை பகுதியில் பரபரப்பு
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொட – கூலிகொட பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 45 வயது நபர் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச்சூடுபட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் வெலிக்கடை சிறைச்சாலையின் சிறைக்காவலர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

