புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டன் ஹரோவில் உள்ள பினர் பாடசாலையில் கொரோனா வைரஸ் ? மூடப்பட்டதால் பரபரப்பு

லண்டன் ஹரோவில் உள்ள பினர் பாடசாலையில், 9 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளதாக கூறி. அந்த பாடசாலை நிர்வாகம் பள்ளியை மூடியுள்ளதாக தெரியவருகின்றது. சமீபத்தில் இத்தாலிக்கு சென்று, பனிச் சறுக்கலில் ஈடுபட்ட மாணவர் குழுவுக்கும். அவர்களை அழைத்துச் சென்ற ஆசிரியர்களுக்குமே இந்த அறிகுறி காணப்பாட்டதால் பெரும் பரபரப்பு தோன்றியுள்ளது.

ஏற்கனவே பிரித்தானியாவில் 9 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினத்தோடு(28) மேலும் 3 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. நாடு தழுவிய ரீதியில் பிரித்தானியாவில் அனைத்து பாடசாலைகளையும் தலா 2 மாதங்கள் மூடிவைக்க பிரித்தானிய அரசு அவசரமாக ஆலோசனை நடத்தி வருவதாக தெரியவருகின்றது.