யாழ் போதனாவைத்தியசாலை வைத்தியரின் உதவியுடன் ஓ.எல் பரீட்சை எழுதும் 4 மாணவர்கள்!!
காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நான்கு மாணவர்கள் தினமும் அம்புலன்ஸ் வண்டியில் க. பொ. த சாதாரணதரப் பரீட்சை எழுதுவதற்காகப் பரீட்சை மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்படுவதாக மேற்படி வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த மாணவர்களில் ஒருவருக்கு காய்ச்சல் அதிகமாக காணப்படுவதால் அவருடன் மருத்துவரொருவரும் பரீட்சை நிலையத்திற்குத் தினமும் சென்று வருகின்றார்.
இதேவேளை, நாடு முழுவதும் நேற்று முன்தினம்(02) க. பொ. த சாதாரணதரப் பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

