அமெரிக்காவில் மர்ம நபரின் வெறியாட்டம்! 20க்கும் அதிகமானோர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் டெக்ஸஸ் (Texas) மாநிலத்தில் அமைந்துள்ள வால்மார்ட் (Walmart) கடையில் நடந்த தூப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திக்க கூடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இருப்பினும், இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை. El Paso நகரில் நடந்த அந்தச் சம்பவத்தின் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை அதிகாரிகள் தடுத்துவைத்துள்ளனர்.
வார இறுதியில் பொருள்களை வாங்க வந்த வாடிக்கையாளர்களைச் சம்பவம் பீதியடையச் செய்தது.
அமெரிக்க ஜனாாதிபதி டொனால்ட் டோனல்ட் டிரம்ப் அதை ஒரு பயங்கரமான சம்பவம் என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
அதன் தொடர்பில், அவர் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டார்.
கடந்த வாரம், வடக்கு கலிபோர்னியாவில் நடந்த உணவு விழாவில் 19 வயது இளையர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு குழந்தைகள் உட்பட மூவர் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

