புதினங்களின் சங்கமம்

யாழில் குடும்பப் பிரச்சனையில் தீயில் எரிந்த பெண் உயரதிகாரி தமிழனி பலி!!

தற்கொலை செய்யும் நோக்கில் தீயில் எரிந்த யாழ் சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் திருமதி தமிழினி சதீசன் இன்று காலை உயிரிழந்தார்.

இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனது சேவையை நேர்மையாக திறமையுடன் துடிதுடிப்புடன் செய்து வந்தவர்,

தமிழப்பற்றுடன் மிகச்சிறந்த சேவைகளை சாவகச்சேரி பகுதியில் செய்து வந்தார், கடவுள் பக்தியுடன் அறம்சார்ந்து இயங்கினார், வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பல பாடசாலை மாணவர்களுக்கு இயலுமான உதவிகள் செய்தவர், என்பது குறிப்பிடத்தக்கது.

சாவகச்சரி பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த வெள்ளிக்கிழமை கடும் தீ காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் ,

ஆறு மாதகர்ப்பிணியாக இருந்த உதவி பிரதேச செயலாளரான பெண் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தாய் மற்றும் ஆறு மாத சிசுவை உயிருடன் மீட்கும் பணிகளும் இடம் பெற்றது .

இன்றைய தினம் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் படுக்கை அறையில் மெழுகு திரி எரிந்து தீ விபத்து ஏற்பட்டதாக தனது வைத்தியசாலை முறைப்பாட்டில் தெரித்துள்ளார் .

சம்பவத்தில் நீர் வேலி பகுதியைச் சேர்ந்த தமிழினி சதீஸ் வயது 35 என்ற உதவி பிரதேச செயலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் இவருக்கு ஆறு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது கணவர் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் கிராம சேவையாளராக பணிபுரிந்து வருகின்றார் இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.