புதினங்களின் சங்கமம்

யாழ்.செல்வச்சந்நிதி ஆலய சுற்றாடலில் வீடு கட்ட அனுமதி பெற்று கிறிஸ்த்தவ போதனைக் கூடம்! உடன் நிறுத்த பணிப்பு

யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள வீதியில் வீடு கட்டுவதற்கான அனுமதிகோரி கிறிஸ்தவ மத கூடம் அமைக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் வலி,கிழக்கு பிரதேசசபை செயலாளரினால் குறித்த கட்டட பணிகளை நிறுத்துமாறு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வலி கிழக்குப் பிரதேசசபைக்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தில் முறைப்பாட்டாளரால் வினாவப்பட்டது.

இதற்கு பதிலளித்த வலி,கிழக்கு பிரதேசசபை செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு பின்புறமாக வீடு கட்டுவதற்காக சண்முகநாதன் அருணன் என்பவரால் அனுமதி கேட்டு விண்ணம் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதியும் பெறப்பட்டதாகத் தகவல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரை தலையிடுமாறு கோரி சிவசேனை சிவ தொண்டர்களால் எழுத்து மூலமாக கடிதம் அனுப்பப்பட்டது.

சபையின் அனுமதி பெறாமல் கட்டடம் மற்றும் மதில் வேலைகள் இடம்பெறுவதாகவும் உரிய அனுமதிகளை பெற்று அமைக்குமாறு இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதேச சபை செயலாளரினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.