புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (26.01.2025)

மேஷம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ரிஷபம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உங்களை யாரும் கண்டு கொள்வதில்லை உங்களுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மிதுனம்

உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சீர் செய்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

கடகம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித்தருவார். தொட்டது துலங்கும் நாள்.

சிம்மம்

மற்றவர்களை நம்பி எந்த வேலைகளையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

கன்னி

நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். புதுவேலை கிடைக்கும். தாயாருக்கு கை கால், வலி வந்து போகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.

துலாம்

தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புதுவாகனம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

விருச்சிகம்

கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். ஆடை ஆபரணம் சேரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

தனுசு

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.

மகரம்

ஒரு விஷயத்தை நினைத்து அதிக அளவில் குழப்பம் அடைவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.

கும்பம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

மீனம்

உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x