கனடாவில் தாய் மற்றும் இரு மகள்கள் கொடூரக் கொலை: 17 வயது சிறுவன் கைது!
கனடாவின் பிராக்வில் (Brockville) பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான கொலை சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிராக்வில் பகுதியில் உள்ள ஒரு இல்லத்தில் 49 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் அவரது 15 மற்றும் 17 வயதுடைய இரு மகள்கள் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். கொல்லப்பட்ட இரு மகள்களில் ஒருவருடன் அச்சிறுவன் உறவில் (Relationship) இருந்ததே இந்தக் கொலைகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு கத்தி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சிறுவன் மீது முதல் நிலை கொலைக் குற்றம் மற்றும் போலீஸ் அதிகாரியைத் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்தச் சம்பவத்தை ஒரு “கொடூரமான துயரம்” என்று நகர மேயர் வர்ணித்துள்ளார்.

