Home புதினங்களின் சங்கமம் பிரதம செயலாளருடன் படுத்தாயா?  யாழில் பெண் கல்விப் பணிப்பாளரிடம் கேட்ட கமலராஜன்!!

பிரதம செயலாளருடன் படுத்தாயா?  யாழில் பெண் கல்விப் பணிப்பாளரிடம் கேட்ட கமலராஜன்!!

கொழும்பில் உள்ள அரச விடுதியில் நிறை வெறியில் குடித்து கும்மாளமிட்டு பக்கத்து அறையில் இருந்த அதிகாரிகளை வம்புச் சண்டைக்கு இழுத்து அதகளப்படுத்தியிருந்தார்கள் 3  வடக்கு மாகாண  கல்விப் பணிப்பாளர்கள் . முல்லைத்தீவு வலயக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர், தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகிய மூவரும் நிறைவெறியில் கொழும்பை அதகளப்படுத்தியது வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையையே சந்தி சிரிக்க வைத்தது.

தற்போது இந்த 3 கல்விப்பணிப்பாளர்களுக்கும் குற்றப்பத்திரிகை வழக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இந் நிலையில் இவ்வாறு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் கமலராஜன் யாழ் மற்றும் வலிகாமம் கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதற்கு கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இருப்பினும் இவரது முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இந் நிலையில் குறித்த இரு வலயங்களுக்கும் பெண் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள. இதனால் கமலராஜன் மீண்டும் கொலை வெறிக்கு உள்ளாகியதாகத் தெரியவருகின்றது,

இதனையடுத்து குறித்த பெண் வலயக்கல்விப் பணிப்பாளர்களில் ஒருவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கமலராஜன் அந்த பணிப்பாளரை மிகவும் தரக்குறைவாக ஏசியதாகவும் வடக்கு மாகாண பிரதம செயலாளருடனும் கல்வி அமைச்சின் செயலாளருடனும் அந்தரங்கத் தொடர்பைப் பேணுகிறாயா? என்ற தொனியில் மிகக் கேவலமான வார்த்தபை் பிரயோகங்களை மேற்கொண்டு ஏசியதாகவும் குறித்த பெண் கல்விப்பணிப்பாளரின் நெருங்கிய நண்பிகள் ஊடாகத் தெரியவந்துள்ளது.

கமலராஜன் தனிமனித நடத்தைக் குறைபாடுடையவர் என்பதும் அவரது சொந்த இடமான மன்னாரில் திருமணம் முடித்து மனைவியையும் மாற்று வலுவுள்ள பிள்ளைகளையும் கை விட்டுவிட்டு கல்வி நடவடிக்கைகளுக்காக தன்னுடன் இணைந்து செயற்பட்ட இன்னொரு பெண்ணுடன் உறவு கொண்டு அதன் பின்னர் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் அந்தப் பெண்ணுடன் தற்போது குடும்பம் நடாத்தி வருவதுடன் பாடசாலை அதிபர்களை மட்டுமரியாதை இல்லாது திட்டித் தீர்த்து தனது வக்கிர புத்தியை காட்டி வருவதாகவும் பாடசாலை அதிபர்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளது.