புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் பொன்னுத்துரை ரவிச்சந்திரநேசன் யாழில் திடீர் மரணம்!!

யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடா பல்கலைக்கழகத்தில் விவசாய ஆராய்ச்சியாளராக கடமை புரியும் இவர், கடந்த 13 ஆம் திகதி கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு பல்கலைக்கழக விரிவுரையாளருடன் ஜூம் தொழில்நுட்பம் மூலம் ஆராய்ச்சி குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

இதனையடுத்து அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள பதிவாளர் வீதியில் இவரது சடலம் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இவர் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சரும் பசுமை இயக்கத்தின் தலைவருமான ஐங்கரநேசனின் தம்பியாவார்.