யாழில் 18 வயது சிவகலக்சன் விபரீத முடிவெடுத்து மரணம்!!
யாழில் 18 வயது இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் நேற்று (23) விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .சம்பவத்தில் கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன் 18 அகவையுடைய இளைஞரே வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் .
சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

