புதினங்களின் சங்கமம்

யாழில் அதிகளவு போதைப் பொருள் பாவித்த இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (29) இரவு இந்த சம்பவம் நடந்தது.

ஹெரோயின் போதைக்கு அடிமையான இந்த இளைஞன், முன்னர் ஊசி மூலம் போதையேற்றி வந்துள்ளார். எனினும், பின்னர் திருந்தி வாழ்ந்து வந்த நிலையில், நேற்று நண்பர்களுடன் ஹெரோயின் போதைப்பொருள் உட்கொண்டுள்ளார்.

அதிகளவான ஹெரோயின் உட்கொண்ட நிலையில், வாயிலிருந்து நுரைதள்ளிய நிலையில் உயிரிழந்துள்ளார்.

இளைஞனின் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் , தந்தையும் சகோதரியும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். அந்நிலையில் இளைஞன் பாட்டியுடன் உரும்பிராயில் வசித்து வருகின்றார். போதையில் வீட்டுக்கு வந்த இளைஞன் நாலைந்து தடவைகள் வாந்தி எடுத்து விட்டு படுத்துள்ளார்.

பாட்டியரும் போதையில் தான் இளைஞன் படுத்துள்ளான் என நினைத்துள்ளார். பாட்டியரும் போதையில் தான் இளைஞன் படுத்துள்ளான் என நினைத்துள்ளார்.

ஆனாலும் நீண்ட நேரமாகியும் இளைஞன் எழும்பாததால் இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை இளைஞன் உயிரிழந்து சில மணி நேரம் ஆகிவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

அதிக ஹெரோயின் உட்கொண்டதே மரணத்துக்கு காரணமென பரிசோதனையில் தெரிய வந்தது.