Home புதினங்களின் சங்கமம் யாழில் மீண்டும் ஒரு 19 வயது மாணவன் துாக்கில் தொங்கி தற்கொலை!! கதறும் பெற்றோர்!!

யாழில் மீண்டும் ஒரு 19 வயது மாணவன் துாக்கில் தொங்கி தற்கொலை!! கதறும் பெற்றோர்!!

வடமராட்சி உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியில் உயர்தரத்தில் இல் கல்வி கற்கும் மகாதேவன் புஸ்பன் (வயது 19 ) என்ற மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.உடுப்பிட்டி இலந்தக்காடு பகுதியை சேர்ந்த குறித்தமாணவன் இன்று காலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இதே வேளை கடந்த வாரமும் யாழ் இந்துவின் மிகவும் கெட்டிக்கார மாணவன் துாக்கில் தொங்கி தற்கொலை செய்தது குறிப்பிடத்தக்கத.