இலங்கை செல்லும் அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!
அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளுக்கு இலவச உள்வருகை வீசாவினை வழங்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை ஈடு செய்யும் வகையில் இந்த புதிய வீசா நடைமுறையை அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சுமார் 46 நாடுகளுக்கு இலவச வீசா வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பெருமளவு சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலவச உள்வருகை வீசா வழங்கும் நாடுகளின் விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நெதர்லாந்து, நோர்வே, சுவீடன், சுவிட்ஸர்லாந்து, அயர்லாந்து, டென்மார், பின்லாந்து, ஜேர்மனி, பெல்ஜியம், ஒஸ்ரியா, பல்கரியா, கம்போடியா, க்ரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, எஸ்டோனியா, க்ரீஸ், இந்தியா, சீனா, ஹங்கேரி, இத்தாலி, லட்வியா, லிதுவேனியா, லக்ஸம்பேர்க், மால்டா, போலாந்து, போர்த்துகல், ரோமானியா, ஸ்லோவக் குடியரசு, ஸ்லோவேனியா, பிலிப்பைன்ஸ், ஸ்பெய்ன், பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, கனடா, சிங்கப்பூர், நியூசிலாந்து, மலேசியா, தாய்லாந்து, மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இலவச உள்வருகை வீசா வழங்கப்படவுள்ளது.
அத்துடன் முதன்முறையாக இலங்கை செல்லும் இந்திய பிரஜைகளுக்கு இலவச உள்வருகை வீசா வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

