யாழ் நகர்ப்பகுதியில் பட்டப்பகலில் திரண்டு காவாலிகள் தாக்குதல்!! பொதுமக்கள் கடும் அச்சம்!!
இன்று மாலை 5.40 மணியளவில் யாழ். நகர் பகுதியில் காவாலிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது காவாலிகளுக்கிடையில் தாக்குதல்களும் நடாத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை நடாத்தியவர்கள் யார்?. தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார்? என்ற விடயங்கள் வெளியாகவில்லை. பொது இடத்தில் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டதால் மக்கள் அச்ச நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இது குறித்து பொலிஸார் பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




