கனடா ஒன்றாரியோவில் கன்னியாஸ்திரி உடையில் கடைக்குள் புகுந்தவர்கள் நடாத்திய திருவிளையாடல்! வீடியோ
கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் குயில்ப் பகுதியில் அச்சுறுத்த கூடிய வேடம் தரித்து கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை(15) இடம்பெற்றுள்ளது
இதன்போது, வர்த்தக நிறுவனத்தின் காசாளரை கத்தி முனையில் அச்சுறுத்தி கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொள்ளையிட வந்தவர்களில் ஒருவர் அச்சுறுத்தும் கன்னியாஸ்திரி போன்றும் மற்றையவர் கறுப்பு நிறத்தில் வேடமிட்டு கொள்ளையில் ஈடுபட்டனர் என்பது பாதுகாப்பு கமராக்களின் காணொளிகள் மூலம் தெரியவந்துள்ளது.
முதலில் இது கேலி செயல் என நினைத்ததாகவும் பின்னர் இருவரும் கொள்ளையிட வந்தவர்கள் என்பதனை புரிந்து கொண்டதாகவும் நிறுவனத்தின் காசாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.