புதினங்களின் சங்கமம்

பூநகரியில் மனைவியின் தம்பியின் காதலியையும் அவளது சகோதரியையும் கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்!!

கிளிநொச்சி பூநகரி பகுதியில் பக்கத்துவீட்டில் வசித்து வந்த 40 வயதான குடும்பஸ்தரால் 21 வயது அக்காவும் 19 வயது தங்கையும் கர்ப்பாக உள்ளதாகத் தெரியவருகின்றது. தற்போது குறித்த யுவதிகள் இருவரும் தமது வீட்டில் இருந்து தாயுடன் தலைமறைவாகியுள்ளனர். பக்கத்துவீட்டு குடும்பஸ்தரின் மனைவி குறித்த சம்பவம் தொடர்பாக குடும்பஸ்தருடன் கடும் சண்டையிட்டு வருவதாகவும் மனைவியின் சகோதரனால் குறித்த குடும்பஸ்தர் தாக்கப்பட்டு கடும் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது. கணவனை இழந்து பொருளாதாரத்தில் நலிவுற்று இருந்த அயல்வீட்டு குடும்பப் பெண்ணின் இரு பெண் பிள்ளைகளையும் குறித்த குடும்பஸ்தர் கர்ப்பமாக்கியுள்ளார். விவசாய இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை வைத்துள்ள குறித்த குடும்பஸ்தர் அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவர் எனவும் கிளிநொச்சி தமிழரசுக் கட்சியின் நெருங்கிய ஆதரவாளர் எனவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மூலம் தெரியவருகின்றது.

குறித்த குடும்பஸ்தரின் மனைவியின் தம்பி 21 வயதான யுவதியை காதலித்து வந்துள்ளார். இந் நிலையில் குறித்த யுவதி மற்றும் அவளது சகோதரியின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பாக தாயார் மற்றும் உறவுகள் விசாரித்த நிலையிலேயே குடும்பஸ்தரின் திருவிளையாடல் அம்பலமாகியுள்ளது. மூத்த மகள் கர்ப்பமாக உள்ளதை அறிந்த தாயார் அவளது காதலனான குடும்பஸ்தரின் மனைவியின் சகோதரனின் வீட்டில் சென்று முரண்பட்டுள்ளார். ஆனால் தனக்கும் அவளது கர்ப்பத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என மனைவியின் சகோதரன் சண்டையிட்டு வந்த நிலையிலேயே மற்றைய மகளும் கர்ப்பநிலையில் உள்ளதை அறிந்து தாயார் அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குடும்பஸ்தர் நடாத்திய லீலைகள் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயாரும் இருமகள்களும் தமது வீட்டில் இருந்து வெளியேறி உள்ளதாகவும் கடந்த ஒரு கிழமையாக அவர்களது வீடு வெறிச்சோடி உள்ளதாகவும் அயலவர்கள் மூலம் தெரியவருகின்றது.

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x