ரணிலின் 3 கோடி 60 லட்சத்தை அமுக்கினாரா கலா அக்கா? ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை…
இம்முறை ஐ.தே.க கட்சியில் முன்னாள் யாழ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் கல்வி ராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் போட்டியிடவில்லை. காரணம் அவருக்கே தெரியும். முட்டாள்தனமாக தோற்கப் போகும் குதிரைக்கு காசு கட்டத்தான் வேணுமா என அவர் சிந்தித்திருப்பார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் தீவிர பிரச்சாரத்தை கலாக்கா நடாத்தியிருந்தார். அவரது பிரச்சாரத் செலவுகளுக்காக 3 கோடி 60 லட்சம் ரூபா பணம் ரணிலால் கொடுக்கப்பட்டிருந்தது என கலாக்காவுக்கு நெருக்கமாக நின்றவர்கள் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் குறித்த ஜனாதிபதித் தேர்தலில் கலாக்காவின் ஆதரவாளர்கள் பலர் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து ரணிலுக்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனாலும் ரணில் தோல்வியடைந்தார். இந் நிலையில் கலா அக்கா தேர்தல் பிரச்சாரத்துக்காக தனக்கு கொடுக்கப்பட்ட 3 கோடி 60 லட்சம் ரூபா பணத்தில் சில லட்சங்களை மாத்திரம் செலவு செய்து விட்டு மீதிப் பணத்தை அமுக்கி விட்டதாகவும் தாங்கள் சொந்தக் காசில் செலவு செய்த தேர்தல் பிரச்சாரச் செலவுகளைக் கூடா தர மறுத்துவிட்டதாகவும் கலா அக்காவின் ஆதரவாளர்கள் சிலர் அழுகின்றனராம்.

