சினிமாபுதினங்களின் சங்கமம்

சிவகார்த்திகேயனுடன் இமான்மனைவி உறவு கொண்டாரா? குட்டி பத்மினி கூறுவது என்ன?

பிரபல இசையமைப்பாளர் இமான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு வெளியில் சொல்ல முடியாத துரோகத்தை செய்து விட்டதாகவும், அதனால் இந்த ஜென்மத்தில் அவர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும் காட்டமாகத் தெரிவித்திருந்தார். மேலும், உங்கள் இருவருக்கும் இடையில் அப்படி என்ன பிரச்சினை என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, அது பெர்சனல் விஷயம் என்றும், இப்போது சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் சூசகமான பதிலை கொடுத்திருந்தார்.

இமான் அளித்த பேட்டி, இணையத்தில் காட்டுதீ போல வைரலாகிய நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் இணையத்தில் இசையமைப்பாளர் இமானை சரமாரியாக திட்டித் தீர்த்தனர். குறிப்பாக, நடிகர் சிவ கார்த்திகேயனின் பெயரைக் கெடுப்பதற்காக இமான் பொய் சொல்கிறார் மற்றும் SK நல்ல மனிதர் என்றெல்லாம் ஏராளமான கருத்துகளை பதிவிட்டு வந்தனர். மற்றொரு பக்கம் இமானுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

இப்படி சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகவும், இமானுக்கு ஆதரவாகவும் இணையத்தில் விவாதப் போர் நடந்து கொண்டிருந்த நிலையில், இமானின் முன்னாள் மனைவி மோனிகா பேட்டி ஒன்றில், ‘சிவகார்த்திகேயன் ஒரு ஜென்டில்மேன், எங்கள் குடும்பத்திற்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது..தன் நண்பரின் குடும்பம் பிரிந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் எங்களைச் சமாதானம் செய்து வைக்கத்தான் அவர் வந்தார்.

ஆனால், அதையும் மீறி இமான் என்னை மிரட்டி விவாகரத்து வாங்கினார். இமானுக்கு இப்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லை..அதனாலேயே சிவ கார்த்திகேயன் மீது பழி போடுகிறார்’ என்று மோனிகா பேசியிருந்தார் . இந்நிலையில் இமான் குற்றசாட்டு குறித்து சிவகார்த்திகேயன் வாயைத் திறக்காமல் இருக்கும் நிலையில், மோனிகா வாய் திறந்து பேசியது, சிவகார்த்திகேயன் தான் மோனிகாவை பின்னணியில் இருந்து பேச வைத்துள்ளார் என்கிற விமர்சனம் எழுந்தது.

இருப்பினும், இந்த சர்ச்சைக்கு நடிகர் சிவ கார்த்திகேயனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இசையமைப்பாளர் இமான் குற்றச்சாட்டுக்கு , அவரின் முன்னாள் மனைவி மோனிகா பதிலுக்கு இமான் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்துள்ள நிலையில், மோனிகா கூறியது அத்தனையும் பொய் என்று பிரபல நடிகையான குட்டி பத்மினி விஷயங்களைப் போட்டுடைத்துள்ளார்.

இது தொடர்பாக குட்டி பத்மினி பேசுகையில், இமான் வீட்டிற்கும் எங்களுக்கும் மிகவும் நெருக்கம், இமான் எனக்கு ஒரு மகன் போலத்தான்.. மோனிகா ஜீவனாம்சம் கொடுக்கவில்லை என்று சொல்வதெல்லாம் பொய். மோனிகாவிற்கு கொடுக்க வேண்டிய ஜீவனாம்சத்தை இமான் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போது வரைக்கும் அவருடைய இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவையும் இமான் தான் பார்த்துக் கொள்கிறார்.

இமானும் அவருடைய தந்தையும் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் குடும்பத்திற்குள் நடந்த பிரச்சினை, சம்பவங்கள் என எல்லாவற்றையும் என்னிடம் மனம் திறந்து கூறி வேதனைபட்டார்கள்.. இமானின் இரண்டாவது மனைவியான எமிலியா என்பவரும் எங்கள் மூலம் தான் அவர்களுக்கு அறிமுகம் ஆனார். மோனிகாவை விவாகரத்து செய்த பிறகு, எமிலியாவை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதால் தான், இமான் எமிலியாவோடு பழக நினைத்தார். இருப்பினும், விவாகரத்திற்கு பிறகு தான் இருவரும் பழகி பின்னர் திருமணம் செய்து கொண்டனர். என்று குட்டி பத்மினி கூறியுள்ளார்.