புதினங்களின் சங்கமம்

மகனை தேடியலைந்தே உயிரை விடும் தாய்மார் ~ மற்றுமொரு தாயும் உயிரிழப்பு !! {படம்}

காணாமல்போன தனது மகனை தேடியலைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மற்றுமொரு தாயார் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடாத்தப்படுகின்ற அனைத்துப் போராட்டங்களிலும் குறித்த தாயார் பங்கெடுத்துள்ளார்.

இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்
புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியை சேர்ந்த செபமாலை திரேசம்பாள் என்பவரே உயிரிழந்துள்ளார்.