சுவிஸ்லாந்தில் யாழ் இளம் குடும்பஸ்தர் கோபிநாத் கொலை!! இருவர் கைது!!
சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலாந்தில் அடுக்குமாடி கட்டடத் தொகுதியில் வசித்து வந்த திருகோணமலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் கோபிநாத் அவர் வசித்து வந்த அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 34 வயதானகோபிநா இளம் குடும்பஸ்தரே உயிரிழந்த நிலையில் இரு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸார் விசாரணை
திருகோணமலையை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் வடமராட்சி பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் தமிழ் குடும்பஸ்தரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பாக சூரிச் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.சமூக அக்கறை கொண்ட குறித்த இளைஞன் திருமலை மண்மீது மிகுந்த பற்று கொண்டவராகவும் இருந்தார். குறிப்பாக கோணேசர் ஆலயம் தொடர்பிலான ஆவணங்கள் தேடும்பணியில் ஈடுபட்டு வந்தததையும் அவதானிக்க முடிந்தது.