புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் ரயிலில் மோதி சனுஜன் பலி!!

மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று முன்தினம் மாலை 3.05 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட புலதுசி கடுகதி ரயில், இரவு 10.20 மணியளவில் மட்டக்களப்பு, திராய்மடுவ பிரதேசத்தை அண்மித்த பகுதியில் இளைஞர் மீது மோதியுள்ளது.
கருவப்பங்கேணி, சிவநாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய மேற்படி இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.