மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞன் கட்டுநாயக்காவில் கைதானது ஏன்?
சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர், மட்டக்களப்பு (Batticaloa) காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், சந்தேகநபர் அபுதாபியிலிருந்து இன்று (19) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து 5 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 25 சிகரெட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தநிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.