யாழில் சகோதரன் தற்கொலை செய்த அதிர்ச்சியில் சகோதரியும் தற்கொலை முயற்சி!!
யாழ்ப்பாணத்தில் சகோதரன் உயிரிழந்த சோகத்தில் சகோதரியும் உயிர்மாய்க்க முயன்ற நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியை சேர்ந்த கோபிசன் என்ற இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.
அந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சகோதரியான இரண்டு மாத குழந்தையின் தாயாரும் உயிர் மாய்க்க முயன்ற நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் தீர்த்த திருவிழாவுக்கு சென்று வீடு திரும்பிய கோபிசன் தற்கொலை !