புதினங்களின் சங்கமம்ஜோதிடம்

இன்றைய இராசிபலன்கள் (15.09.2024)

மேஷம்

நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள் மகிழ்ச்சிகரமான நாள்.

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் உணர்ச்சிவசப்படமால் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கப் பாருங்கள். கவனம்தேவைப்படும் நாள்.

கடகம்

பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

சிம்மம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.

கன்னி

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்பு தொல்லை குறையும். வேற்றுமதத்தவர் உதவுவார்கள். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

துலாம்

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்றுவரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

விருச்சிகம்

உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வாகனத்தை வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.

தனுசு

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் நலம் சீராகும். அழகும் இளமையும் கூடும். விலை உயர்ந்த பொருள்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்பட வேண்டிய நாள்.

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கும்பம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். அனாவசிய செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.

மீனம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x