கனடாவில் கோயில் ஐயருடன் கள்ளக்காதல் சந்தேகம்!! மனைவியை நையப்புடைத்த கிளிநொச்சி 43 வயது அருள்பிரகாஸ் கைது!!
கனடா ஒன்ராறியோவில் மனைவியை அடித்து தலையில் காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சொந்த இடமாகக் கொண்ட 43 வயதான அருள்பிரகாஸ் என்பவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே இவ்வாறு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த பகுதிக்கு அண்மையில் உள்ள கோவில் ஒன்றின் குருக்களான இந்தியாவைச் சேர்ந்த ஒருவருடன் மனைவி கள்ளத் தொடர்பில் இருப்பதாக ஏற்பட்ட சந்தேகம் சில நாட்களாக குறித்த குடும்பத்தில் சச்சரவை ஏற்படுத்தியிருந்துள்ளது. இதன் பின்னரே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த கோயில் ஐயர் தங்கியிருந்த இடத்திற்கு மனைவி காரில் சென்று வீடு திரும்பும் போது காரை வழி மறித்து அருள்பிரகாஸ் மனைவியைக் கடுமையாகத் தாக்கியதாகவும் காரைச் சேதப்படுத்தியதாகவும் தெரியவருகின்றது.