புதினங்களின் சங்கமம்

தன்னை பலாத்காரம் செய்ய முற்பட்ட டொக்டரின் அந்தரங்க உறுப்பை அறுத்த நேஸ்!!

இந்தியாவின் பீகாரின் தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த புதன்கிழமை இரவு (11) , தன்னை பலாத்காரம் செய்யவந்தவரின் அந்தரங்க உறுப்பை தாதி அறு த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரின் கங்காபூரில் உலா RBS ஹெல்த் கேர் என்ற மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக இருக்கும் மருத்துவர் சஞ்சய் குமார் என்பவரும் அவரது நண்பர்கள் இருவரும் சேர்ந்து குடிபோதையில் அங்கு பணியாற்றி வந்த தாதியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு பலாத்காரம்
அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடிய தாதி, மருத்துவர் சஞ்சய் குமாரின் பிறப்பு உறுப்பை கையில் கிடைத்த பிளேடால் அறுத்துள்ளார். அதன்பின் மருத்துவமனையில் இருந்து தப்பித்த தாதி, அருகில் இருந்த இடத்தில் மறைந்துகொண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைத்த பொலிஸார் தாதியை மீட்டு மருத்துவர் சஞ்சய் குமார் உட்பட அந்த மூவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முடிவெடுத்ததும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை மருத்துவர் அணைத்துள்ளமை பொலிஸ் விசாரணையில் அமபலமாகியுள்ளது.

மேலும் சம்பவ இடத்தில் இருந்து அந்த உபயோகித்த பிளேட், இரத்தம் தோய்ந்த துணிகள், மூன்று கைபேசிகள், மதுபான போத்தல்கள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.அதேவேளை அண்மையில் கொல்கத்தாவில் பெண் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x