விஜயகலாவுக்கு விளையாட்டுக் காட்டியது யார்? (Photos)
கிளிநொச்சியில்புதிதாக அமைக்கப்பட்ட உள்ளக விளையாட்டரங்கம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வுக்காக போடப்பட்டிருந்த வரவேற்பு பதாகையில் தமிழ் எழுத்து பிழைகள் காணப்படுகின்றமை குறித்து
விமா்சனங்கள்எழுந்துள்ளது. நீண்டகாலமாகஅமைக்கப்பட்டுவந்த குறித்த உள்ளக விளையாட்டரங்கத்தை இன்று அமைச்சா்களானஹாின் பொ்ணான்டோ மற்றும் கல்வி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் ம ற்றும் நாடாளுமன்றஉறுப்பினா் மாவை சோ.சேனாதிராஜா ஆகியோா் விருந்தினா்களாககலந்து கொண்டிருக்க இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனை சிவலிங்கம் தா்ஷினிதிறந்துவைத்துள்ளாா். இந்த நிகழ்வுக்கான வரவேற்று பதாகையில் வரவேற் கிறோம்என்பதற்கு பதிலாக தமிழில் “வரவேட்கிறோம்” என எழுதப்பட்டுள்ளது. இந்தநிகழ்வில் கல்வி ராஜாங்க அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, மற்றும் பிரதேசசபை தலைவா் உறுப்பினா்கள் எனபலரும் கலந்து கொண்டபோதும் இந்த எழுத்து பிழை தொடா்பாகஅவா்கள் கொள்ளவில்லை.