Vampan memesபுதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனிலிருந்து சுமந்திரன் ஓடினாரா?? வடிவேலு பாணியில் ஒரு சம்பவம் இதோ!!

செய்தி – சுமந்திரனின் லண்டன் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நிருபர் – என்ன சேர் இந்த ஓட்டம் பிடிக்கிறியள்?

சுமந்திரன் – யோவ் சும்மா இருய்யா. என்ர கஸ்டம் எனக்கெல்லோ தெரியும்?

நிருபர் – ஏன் சேர்! என்ன பிரச்சனை?

சுமந்திரன் – இந்த லண்டன் தமிழன் பூராவும் முரட்டுகாரன்களாய் இருக்கிறான்களடா. கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் செருப்பால அடிக்க ஓடி வாராங்கள்.

நிருபர் – அப்படியா என்ன நடந்தது? நீங்கதான் ரொம்ப தைரியமான ஆள் ஆச்சே?

சுமந்திரன் – அட சும்மா இருய்யா நீ வேற. இலங்கையில எஸ்.ரி.எவ் பொலிஸ் பாதுகாப்பில் வீரம் பேசுவன். ஆனால் லண்டனில அப்படி பேச முடியுமா? அவனுகள் கழுத்து வெட்டுவன் என்று கூறிய பிரிகேடியர் பிரசன்ன வீரதுங்கவையே விரட்டி அடிச்சவங்கள். என்னை சும்மா விடுவாங்களா?

நிருபர் – அப்ப கூட்டம் நடக்கவில்லையா சேர் ?

சுமந்திரன் – யோவ் எப்படி நடத்த முடியும்? அவனவன் லீவு போட்டுவிட்டு எனக்கு அடிக்க என்று அலைஞ்சு திரிந்து செருப்பு பொறுக்கி வைத்திருக்கிறாங்களாம். இதை பெருமையாய் பேஸ்புக்கில் பதிவு வேற போடுறாங்கள்.

நிருபர் – என்ன கொடுமை சேர்? இதை தடுக்க முடியாதா?

சுமந்திரன் – இலங்கையில் என்றால் சி.ஜ.டி பொலிசுக்கு சொல்லி மிரட்டலாம். லண்டனில் என்ர பருப்பு எதுவும் வேகாதே?

நிருபர் – உங்கள் தொண்டர் படை பாதுகாப்பு தரவில்லையா?

சுமந்திரன் – அட நீங்க வேற தம்பி. எனக்கு சந்தேகமே அந்த இரண்டு செம்புகள்மீதுதான். அவங்கள் எனக்கு அடி வேண்டித்தரத்தான் கூட்டத்தை ஒழுங்கு பண்ணினாங்களோ என்று எனக்கு சந்தேகமாய் இருக்கு.

நன்றி

Balan Chandran