புதினங்களின் சங்கமம்

யாழ் நோக்கி வந்த ஹயஸ் வவுனியாவில் விபத்து!! 8 பேருக்கு நடந்தது என்ன?

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (17.03.2019) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட எட்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கயர்ஸ் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்மையிழந்து பனை மரத்துடன் மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் பொதுமக்களின் உதவிடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.