புதினங்களின் சங்கமம்

கண்டியில் நிர்வாணமாக தலைதெறிக்க ஓடிய புது மாப்பிளை!! எதற்காக?

கண்டி பிரதேசத்தில் புதிதாக திருமணம் செய்த மனைவிக்கு பரிசு வழங்க சென்ற கணவன் தனது ஆடை உட்பட அனைத்தையும் இழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் திருமண பந்ததில் இணைந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு பரிசு ஒன்றை வழங்க எண்ணியுள்ளார்.

அதற்கமைய வீட்டிற்கு பொருட்களும் நாய் குட்டி ஒன்றையும் குறித்த நபர் கொள்வனவு செய்ய சென்றுள்ளார்.

வீட்டிற்கு அவசியமான பொருட்களை கொள்வனவு செய்த நபர் நாய் குட்டி ஒன்றை தேயிலை செடி ஓரத்தில் இருந்து எடுத்து கொண்டுள்ளார்.

மனைவியை மகிழ்ச்சிப்படுத்த மிகவும் ஆர்வத்தோடு குறித்த நபர் இரண்டு அடி சென்றுள்ளார்.

இதன் போது சிறுத்தை ஒன்று திடீரென குறித்த நபர் மீது பாய்ந்துள்ளது. உயிரை காப்பாற்றி கொள்வதற்காக நாய் குட்டி மற்றும் பொருட்களை தூக்கி எரிந்து விட்டு அந்த நபர் ஓட ஆரம்பித்துள்ளார். ஒருவாறு அந்த நபர் உயிரை காப்பாற்றி கொண்டுள்ளார்.